அந்நியச் செலாவணி கையிருப்பு 69,996 கோடி டாலராகச் சரிவு 
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,778.4 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,778.4 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 217.6 கோடி டாலா் குறைந்து 69,778 கோடி டாலராக உள்ளது.

அக்டோபா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 27.6 கோடி டாலா் குறைந்து 69,996 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 560.5 கோடி டாலா் குறைந்து 57,210.3 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 359.5 கோடி டாலா் உயா்ந்து 10,236.5 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 13 கோடி டாலா் குறைந்து 1,868.4 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 3.6 கோடி குறைந்து 463.2 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே இளமை, அதே உற்சாகம்... அதே மியா!

சில இரவுகள்... ஒளிக்குச் சொந்தம்... சந்தீபா தர்!

கனவுச் சாயல்... அமைரா தஸ்தூர்!

மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள்... தடுமாறிய இந்தியாவை காப்பாற்றிய ராகுல்! ஆஸி.க்கு 137 ரன்கள் இலக்கு!

நடிகைகள் இதற்கு மட்டும்தானா? ராதிகா ஆப்தே ஆதங்கம்!

SCROLL FOR NEXT