புதுதில்லி: ஸ்பாட் சந்தையில் வர்த்தகர்கள் தங்களின் நிலைகளை குறைத்ததால் இன்று (திங்கள்கிழமை) கச்சா எண்ணெய் பியூட்டர்ஸ் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு ரூ.27 குறைந்து ரூ.5,026 ஆக உள்ளது.
மல்டி-கமாடிட்டி சந்தையில், நவம்பர் டெலிவரிக்கான கச்சா எண்ணெய் விலை 3,713 லாட்-க்கு ரூ.27 குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு ரூ.5,026 ஆக இருந்தது.
ஸ்பாட் சந்தையில் தேவை குறைவால் வர்த்தகர்கள் தங்கள் கைவசம் உள்ள நிலைகளை விடுவித்த நிலையில் விலை சரிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உலகளவில், மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.64 சதவிகிதம் குறைந்து 57.17 அமெரிக்க டாலராகவும், நியூயார்க்கில், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.54 சதவிகிதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு ரூ.60.94 அமெரிக்க டாலராகவும் வர்த்தகமானது.
இதையும் படிக்க: 4வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.