கோப்புப் படம் 
வணிகம்

தங்கம் விலை சவரன் ரூ.1440 குறைவு!

தங்கம் விலை இன்று மாலை சற்று குறைந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கம் விலை இன்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்துள்ளது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,080 உயர்ந்திருந்த நிலையில், பிற்பகலில் சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் தங்கம் கிராம் ரூ. 180 குறைந்து ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ஒரு சவரன் ரூ. 96,000க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ. 182க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று காலையில், ரூ. 2 குறைந்து ரூ. 188-க்கு விற்பனையானது. தற்போது மேலும் ரூ. 6 குறைந்துள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கம்

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் சவரன் ரூ.5,600 உயர்ந்து வெள்ளிக்கிழமை சவரன் ரூ.97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கத்தின் விலை ரூ.1,600, தீபாவளி நாளான நேற்று ரூ. 640 குறைந்தது.

இதையும் படிக்க | வெள்ளி வெறும் ஆபரணமல்ல! விலை உயர்வின் பின்னணி!

gold silver rate update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: இலங்கைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

பெண்களையும் இளைஞர்களையும் நம்புகிறேன்: மு.க. ஸ்டாலின்

மோகன்லால் - 367 திரைப்பட இயக்குநர் அறிவிப்பு!

ஆன்மிக தொடரில் அறிமுகமாகும் விஜய் - அஜித் பட நாயகி!

திமுக மகளிரணி மாநாடு தொடங்கியது!

SCROLL FOR NEXT