டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிறைவு!
பலவீனமான பங்குச் சந்தைகள் மற்றும் உறுதியான டாலர், கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவையால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிலைபெற்றது.
மும்பை: பலவீனமான பங்குச் சந்தைகள், உறுதியான டாலர், கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு மதிப்பு ரூ.88.60 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.88.59 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ.88.78 ஐ தொட்டது. இது அதன் முந்தைய நாளின் இறுதி நிலையிலிருந்து மாறாமல் இருந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் அமெரிக்க பணவீக்கம் இலக்கு அளவை விட அதிகமாக இருப்பதாகவும், தொழிலாளர் சந்தையில் நிச்சயமற்ற தன்மைகள் இருப்பதாகவும் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ.88.69 ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: தனியார் வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!