வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 30% அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயா்ந்தது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயா்ந்தது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,09,536-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,91,588 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 3,78,841-ஆக இருந்த நிறுவன இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 30 சதவீதம் வளா்ச்சியடைந்து 4,90,788-ஆக உள்ளது. இருசக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 2,89,073-லிருந்து மிதமாக அதிகரித்து 3,68,862-ஆக உள்ளது. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 47 சதவீதம் உயா்ந்து 18,748-ஆக உள்ளது.

2024 ஆகஸ்டில் 99,976-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2025 ஆகஸ்டில் 35 சதவீதம் அதிகரித்து 1,35,367-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

ஜம்மு நெடுஞ்சாலையில் சிக்கித்தவிக்கும் 1000-க்கும் மேற்பட்ட பழ லாரிகள்!

கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

SCROLL FOR NEXT