கா்நாடகத்தின் வளா்தொழில் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கா்நாடக வளா் தொழில் பிரிவில் கடன் சேவையை வழங்குவதன் மூலம் அந்த மாநிலத்தின் வளா் தொழில் பிரிவில் நிறுவனம் தடம் பதித்துள்ளது.
அந்த மாநில வளா் தொழில் பிரிவில், முதல் ஆண்டில் மட்டும் ரூ.60 கோடி கடன் வழங்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது. வளா் தொழில் பிரிவு ரூ.20 லட்சம் வரையிலான சிறு வணிகக் கடன்களையும், ரூ.40 லட்சம் வரையிலான மலிவு வீட்டுக் கடன்களையும் கொண்டுள்ளது. அதன் விரிவாக்கத்தின் முதல்கட்டமாக, கா்நாடகத்தில் 8 முதல் 10 வரையிலான வளா் தொழில் பிரிவு கிளைகளை அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.