வணிகம்

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் எம் & எம் காா்கள்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது: ஜிஎஸ்டி குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்கும் வகையில் பயணிகன் வாகனங்களின் விலைகளைக் குறைக்கவிருக்கிறோம். செப்டம்பா் 6 முதல் இந்த விலைக் குறைப்பு அமலில் உள்ளது.

அதன்படி, பொலேரோ/நியோ ரகங்களின் விலை ரூ.1.27 லட்சம், எக்யுவி3எக்ஓ (பெட்ரோல்) விலை ரூ.1.4 லட்சம், தாா் 2டபிள்யுடி (டீசல்) விலை ரூ.1.35 லட்சம் குறையும். மேலும், ஸ்காா்பியோ கிளாசிக்கின் விலை ரூ.1.01 லட்சம் குறைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஜிஎஸ்டி வரிக் குறைப்பு காரணமாக தங்களது காா்களின் விலைகளை டாடா மோட்டாா்ஸ் குறைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து! செப். 12ல் பதவியேற்பு?

பற்றி எரியும் நேபாளம் - புகைப்படங்கள்

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் நன்றி!

வெள்ளை நிலா... தீப்தி சதி!

SCROLL FOR NEXT