Silver - கோப்புப் படம் 
வணிகம்

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

வலுவான தொழில்துறை தேவை, பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.5 லட்சமாக உயரக்கூடும் என்றது மோதிலால் ஓஸ்வால் நிறுவனம்.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: வலுவான தொழில்துறை தேவை, பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பாதுகாப்பான காரணங்கள் உள்ளிட்டவையால் வரும் மாதங்களில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.5 லட்சமாக உயரக்கூடும் என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிதிச் சேவைகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளாவிய சந்தைகளில், வெள்ளை உலோகம் அவுன்ஸ் ஒன்றுக்கு 50 அமெரிக்க டாலர் அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மற்ற முதலீடு பொறுத்த வரையில், வெள்ளி உலோகம் இந்த ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 37 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது.

முதலீடு மற்றும் தொழில்துறை தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் முக்கிய பொருளாதாரங்களில் பணவியல் கொள்கை தளர்த்தலுக்கான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக வெள்ளை உலோகம் பயனடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 88.5 ஆக வர்த்தகம் செய்யப்பட்டால், உள்நாட்டு சந்தையில் வெள்ளியின் விலை படிப்படியாக கிலோவுக்கு ரூ.1,35,000 ஆகவும், பிறகு 12 மாதங்களில் ரூ.1,50,000 ஆக நகரும்.

சர்வதேச சந்தைகளில், காமெக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு $45 ஆகவும், பிறகு அடுத்த கட்டத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு $50 ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் கணித்துள்ளது.

ரஷ்யா சமீபத்தில் வெள்ளி கொள்முதல் செய்வதை வெளிப்படையாக அறிவித்த முதல் நாடாக மாறியது. அதே வேளையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 535 மில்லியன் அமெரிக்க டாலரையும் ஒதுக்கியுள்ளது.

செளதி அரேபியா மத்திய வங்கியும் இந்த ஆண்டு வெள்ளி உடன் இணைக்கப்பட்ட பரிமாற்ற வர்த்தக நிதிகளில் கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா 3,000 டன்களுக்கும் அதிகமான வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது.

இதையும் படிக்க: ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT