பங்குச் சந்தைகள் இன்று(திங்கள்கிழமை) சரிவுடன் தொடங்கிய நிலையில் தற்போது ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,925.51 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. நண்பகல் 12.10 மணியளவில் சென்செக்ஸ் 5.44 புள்ளிகள் அதிகரித்து 81,911.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13.25 புள்ளிகள் குறைந்து 25,101.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 8 நாள்கள் பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமான நிலையில் இன்று ஏற்ற, இறக்கத்தில் மாறி மாறி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
பஜாஜ் ஃபின்சர்வ், ஹீரோ மோட்டோகார்ப், எடர்னல் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.அதேநேரத்தில் இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பும் இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையும் பங்குச்சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இன்றைய வர்த்தகத்தில் துறைசார்ந்த குறியீடுகளில் நிஃப்டி ஆட்டோ அதிக லாபம் ஈட்டியது. ஜிஎஸ்டி குறைப்பால் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை பங்குகள் ஏற்றமடைந்து வருகின்றன. இதற்கு நேர்மாறாக, நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.