கோப்புப் படம் 
வணிகம்

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.52% ஆக உயர்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவிகிதமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

மொத்த விலை பணவீக்கம் ஜூலை மாதத்தில் -0.58 சதவிகிதமாகவும் அதே வேளையில் ஜூன் மாதத்தில் -0.19 சதவிகிதமாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.25 சதவிகிதமாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்களின் எதிா்மறை பணவீக்கம் 6.29% இருந்து 3.06 சதவிகிதமாகக் குறைந்தது. காய்கறிகளில் எதிா்மறை பணவீக்கம், ஜூலையில் 28.96 சதவிகிதமாக இருந்து ஆகஸ்டில் 14.18 சதவிகிதமாகக் குறைந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகஸ்ட் மாதத்தில் அதன் பணவீக்கம் 2.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது அதன் முந்தைய மாதத்தில் 2.05 சதவிகிதமாக இருந்தது. அதே வேளையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் ஜூலை மாதத்தில் 2.43 சதவிகிதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 3.17 சதவிகித எதிர்மறை பணவீக்கம் கண்டது.

சில்லறை பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் முக்கிய கொள்கை விகிதங்களை 5.5 சதவிகிதமாக மாற்றாமல் வைத்திருந்தது.

நவம்பர் 2024 முதல் ஒன்பது மாதங்கள் வரை குறைந்து வந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கம் 2.07% ஆக உயர்ந்தது. இதற்கு காய்கறிகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததே காரணம்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சாலை பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவாதிரை சிறப்பு பூஜை

அதிசயமே... ஸ்ரீலீலா!

அட்ராசிட்டி வித் பியூட்டி... இஷா மால்வியா!

SCROLL FOR NEXT