இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை காலை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிவுடன் 82,175 புள்ளிகளாக தொடங்கியது. காலை 11 மணியளவில் 82,502 புள்ளிகளாக விற்பனையாகி வருகின்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் வர்த்தகம் தொடங்கியவுடன் 89 புள்ளிகள் சரிந்து 25,216 ஆக விற்பனையானது. காலை 11 மணி நிலவரப்படி 25,306 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
ஐ.டி. பங்குகள் சரிவு
அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது, இந்திய ஐடி நிறுவனங்களையும் ஊழியர்களையும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.
சென்செக்ஸை பொருத்தவரை டெக் மஹிந்திரா (-4.62%), இன்ஃபோசிஸ்(-2.97%), எச்.சி.எல். டெக்(-2.89%), டி.சி.எஸ்.(-2.87%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.
அதேபோல், நிஃப்டி ஐடி துறையின் பங்குகளும் வர்த்தகத்தின் தொடக்கத்தில் 2.92 % குறைந்து 35,509 புள்ளிகளாக விற்பனையாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.