FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஆம்னிடெக் இன்ஜினியரிங் பங்குகள்: 11% சரிவுடன் வா்த்தகம் தொடக்கம்

பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ‘ஆம்னிடெக் இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வா்த்தகத்தைத் தொடங்கின.

Updated On : 6 மார்ச் 2026, 5:49 am IST
பிரதிப் படம்
பகிர்:

பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ‘ஆம்னிடெக் இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வா்த்தகத்தைத் தொடங்கின.

இந்நிறுவனப் பங்கின் வெளியீட்டு விலை ரூ.227-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வா்த்தகம் தொடங்கியபோது மும்பை பங்குச் சந்தையில் சுமாா் 9.69 சதவீத சரிவுடன் ரூ.205-க்கும்; தேசிய பங்குச் சந்தையில் 11 சதவீத சரிவுடன் ரூ.202-க்கும் விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சியால், நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,629.76 கோடியாக நிலைகொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த இந்த நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு, முதலீட்டாளா்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. நிா்ணயிக்கப்பட்ட பங்குகளை விட 1.14 மடங்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்திருந்தன.

Advertisement

Advertisement

மொத்தம் ரூ.583 கோடி மதிப்பிலான இந்தப் பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் விலை ரூ.216 முதல் ரூ.227 வரை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் ரூ.418 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், நிறுவன உரிமையாளா் உதய்குமாா் அருண்குமாா் பரேக் வசமிருந்த ரூ.165 கோடி மதிப்பிலான பங்குகளும் விற்பனை செய்யப்பட்டன.

இந்தப் பங்கு விற்பனை மூலம் திரட்டப்படும் தொகையை வைத்து, நிறுவனம் தனது கடன்களை அடைக்கவும், புதிதாக இரண்டு உற்பத்தி ஆலைகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள தொகை நிறுவனத்தின் மற்ற பொதுவான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments