மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக முடிவடைந்தது.
இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளிட்டவையால் இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சற்றே உயர்ந்தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.72 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.88.67 முதல் ரூ.88.73 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72ஆக நிறைவடைந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1 காசு சரிந்து ரூ.88.76 என்ற புதிய வாழ்நாள் சரிவில் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: மருந்து மீதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.