மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் மருந்துகளுக்கு 100 சதவிகித வரிகளை அறிவித்ததால், முதலீட்டாளர்கள் மருந்து மற்றும் ஐடி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததை தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதம் வரை சரிந்து முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 827.27 புள்ளிகள் சரிந்து 80,332.41 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 733.22 புள்ளிகள் சரிந்து மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு 80,426.46 புள்ளிகளாக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 236.15 புள்ளிகள் சரிந்து மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு 24,654.70 புள்ளிகளாக நிலைபெற்றது. பங்குச் சந்தையில், தொடர்ந்து 6-வது நாளாக 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து வர்த்தகம் முடிவடைந்தது.
வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அதிபர் டிரம்ப்.
இதனை தொடர்ந்து பெரும்பாலான மருந்து சார்ந்த பங்குகள் சரிந்த நிலையில், பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீட்டு எண் 2.14 சதவிகிதமும், வோக்ஹார்ட் பங்குகள் சுமார் 9.4 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தன.
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, எடர்னல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் எச்.சி.எல். டெக் ஆகியவை சரிந்தும் லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஐடிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்தன.
நிஃப்டி-யில் இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மா, எம் அண்ட் எம், எடர்னல், டாடா ஸ்டீல் ஆகியவை சரிந்த நிலையில் லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி ஆகியவை உயர்ந்தும் வங்கி, மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், உலோகம், ஐடி, தொலைத்தொடர்பு, மருந்து, பொதுத்துறை வங்கி ஆகிய அனைத்து துறை குறியீடுகளும் தலா 1 முதல் 2 சதவிகிதம் வரை சரிந்து முடிவடைந்தன.
அக்டோபர் 1 முதல் பிராண்டு மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்கு 100% அதிக வரியை அறிவிப்பை தொடர்ந்து, இன்றைய பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் முடிவடைந்தன. சமீபத்திய எச்-1பி விசா கட்டணங்கள் உயர்வை அடுத்து எதிர்பாராத இந்த நடவடிக்கை ஏற்கனவே பலவீனமாக இருந்த முதலீட்டாளர்களின் உணர்வை முற்றிலும் உலுக்கியுள்ளது.
கிராம்டன் கிரீவ்ஸ் கன்சூமர் எலக்ட்ரிக்கல், சன் பார்மா, பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோநெட் எல்என்ஜி, ஃபைவ்-ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ், ஐஆர்பி இன்ஃப்ரா, டிசிஎஸ், வேதாந்த் ஃபேஷன்ஸ், ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார குறைந்த அளவை எட்டியது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹேங் செங் ஆகியவை கணிசமாக சரிந்தது முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.4,995.42 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.27 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 69.23 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: செல்போன், மின்னணு சாதனங்களுக்கு ஃபிளிப்கார்டின் எக்ஸ்சேஞ்ச் திட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.