வணிகம்

ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் சரிவு

கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மழைக்காலம் மற்றும் ராசியில்லாத காலமாகக் கருதப்படும் பித்ரு பட்சம் (செப்டம்பர்) காரணமாக கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சென்னை, தில்லி-என்சிஆர், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் எழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் சரிந்து 97,080-ஆக உள்ளது.

எனினும், மதிப்பு ரீதியில் விற்பனை 14 சதவீதம் உயர்ந்து ரூ.1.52 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,07,060 வீடுகள் ரூ.1.33 லட்சம் கோடிக்கு விற்பனையாகின.

மதிப்பீட்டு காலகட்டத்தில் மும்பை பெருநகரப் பகுதியில் 16 சதவீதம் குறைந்து 30,260-ஆக உள்ளது. அந்த எண்ணிக்கை புணேயில் 13 சதவீதம் குறைந்து 16,620-ஆகவும், தில்லி-என்சிஆரில் 11 சதவீதம் குறைந்து 13,920-ஆகவும் உள்ளது.

2024-ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வீடுகள் விற்பனை பெங்களூரில் 1 சதவீதம் குறைந்து 14,835-ஆக உள்ளது. ஹைதராபாதில் 11 சதவீதம் குறைவாக 11,305 வீடுகள் விற்பனையாகின.

எனினும், மதிப்பீட்டு காலகட்டத்தில் வீடுகள் விற்பனை கொல்கத்தாவில் 4 சதவீதம் உயர்ந்து 4,130-ஆகவும் சென்னையில் 33 சதவீதம் உயர்ந்து 6,010-ஆகவும் உள்ளது.

கடந்த ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் இந்த ஏழு நகரங்களிலும் வீடுகளின் சராசரி விலை 9 சதவீதம் உயர்ந்து சதுர அடிக்கு ரூ.9,105-ஆக உள்ளது.

விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 5,61,756-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநரான நடிகை வரலட்சுமி சரத்குமார்..! தயாரிப்பு நிறுவனமும் தொடக்கம்!

முன்னாள் முதல்வர் சைகோ! அழைப்பிதழால் ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிருப்தி!

ஹைதராபாதில் வெள்ளம்! 1000 பேர் வெளியேற்றம்!

உணவுப் பாதுகாப்பு காவலர் எம்.எஸ். சுவாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின்

எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

SCROLL FOR NEXT