பங்குச் சந்தைகள் 
வணிகம்

வாரத்தின் முதல் நாள்.. உயர்வுடன் பங்குச் சந்தை தொடக்கம்

வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை உயர்வுடன் பங்குச் சந்தைகள் தொடங்கின.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை நிஃப்டி 50 மற்றும் மும்பை பங்குச் சந்தைக குறியீடுகள் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த வாரம் கடுமையான வீழ்ச்சிகளை சந்தித்து வந்த பங்குச் சந்தை குறியீடுகள் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஏறுமுகத்தில் உள்ளன.

நிஃப்டி 50 குறியீடு 24,700 என்ற அளவிலும், மும்பை பங்குச் சந்தை குறியீடு 80 புள்ளிகள் உயர்ந்தும் இன்று காலை 9.16 மணிக்கு வர்த்தகமாகின.

இன்று காலை வணிகம் தொடங்கிய போது நிப்டி 50 குறியீடு 24,691.10 என்ற நிலையில் இருந்து 36 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தைத் தொடங்கியது. மும்பைப் பங்குச் சந்தை 80,51.74 என்ற அளவில் இருந்து 84 புள்ளிகள் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் பங்குச் சந்தை தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து நிப்டி 24,800 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. அமெரிக்க வரி விதிப்பு முறை, எச்1 பி விசா கட்டணம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு காரணிகள் பங்குச் சந்தைகளில் எதிரொலித்ததன் விளைவாக, கடந்த வாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த வாரம் அந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தாரா - 1 முன்பதிவு துவக்கம்!

தசரா பேரணியை ரத்து செய்து வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிதியை விடுவிக்கவும்: பாஜக

அறிவுறுத்துவதை பின்பற்றுகிறார் சூர்ய குமார்; கிரிக்கெட்டுதான் அவமரியாதை! பாகிஸ்தான் கேப்டன்

இளைஞர் தீக்குளிக்க முயற்சி! காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

உடல்கூராய்வு மோசடி! கொலையாளிகளுக்கு உதவும் கும்பல்! ஒரு பொய் ரிப்போர்ட் ரூ.50,000

SCROLL FOR NEXT