முகப்பு
வணிகம்

ஏப்ரல் 15-ல் அறிமுகமாகிறது ஷாவ்மி ஸ்மார்ட் டிவி! எஸ் மினி எல்இடி!

ஷாவ்மி நிறுவனம் புதிதாக மினி ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யவுள்ளது குறித்து...

Updated On : 1 ஏப்ரல் 2026, 4:05 pm IST
ஷாவ்மி எஸ் மினி எல்இடி டிவி - படம் / நன்றி - ஷாவ்மி
பகிர்:

ஷாவ்மி நிறுவனம் புதிதாக மினி ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய சந்தையில் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ் மினி எல்இடி ஸ்மார்ட் டிவியை, 55, 65, 75, 85 மற்றும் 98 அங்குலம் என 5 வகையான திரை அளவுகளுடன் ஷாவ்மி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. புதிதாக குளிர்பதனப் பெட்டி, குளிரூட்டி போன்றவற்றையும் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த வகையில் புதிதாக எஸ் மினி எல்இடி ஸ்மார்ட் டிவியை இந்திய சந்தைக்கு ஷாவ்மி அறிமுகம் செய்யவுள்ளது. எக்ஸ் தளப் பதிவு மூலம் ஷாவ்மி இதனை உறுதி செய்துள்ளது.

ஷாவ்மி கிளைகளில் மட்டுமல்லாது, பலதரப்பட்ட தளங்களில் சில்லறை விற்பனையை அதிகரிப்பதற்கான பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஷாவ்மி எஸ் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்

  • எஸ் மினி எல்இடி ஸ்மார்ட் டிவி 5 வகையான திரை அளவுகளுடன் தயாரிக்கப்படுகின்றன. 55, 65, 75, 85 மற்றும் 98 அங்குல திரைகளில் கிடைக்கும்.

  • இந்த வகை திரைகள் அனைத்தும் 4கே (3,840 x 2,160 பிக்சல்ஸ்) விடியோ தரத்தில் இயங்குபவை.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1,200 nits திறன் உடையது.

  • 15W ஸ்பீக்கர், டால்பி ஒலி அம்சம் உடையது.

  • கூகுள் ஓஎஸ் உள்ளதால் அனைத்து வகையான ஒளிபரப்பு தளங்களையும் தரவிறக்கம் செய்து காண இயலும்.

  • வைஃபை 5, புளுடூத் 5.0 உடையன.

  • இரண்டு எச்.டி.எம்.ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட்கள் உள்ளன.

  • அடுத்தடுத்த நாள்களில் இதன் விலை குறித்து ஷாவ்மி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Xiaomi TV S Mini LED series India launch set for April 15: What to expect

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.