15 விநாடிகளில் கூலிங்! ஷாவ்மியில் அறிமுகமானது சப்தமில்லாத ஏசி!
ஷாவ்மியில் புதிதாக குளிரூட்டி (ஏசி) அறிமுகமாகியுள்ளது குறித்து...
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த ஷாவ்மி நிறுவனம் தற்போது குளிரூட்டி (ஏசி) தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. மிஜியா என்ற ஸ்பிளிட் ஏசியை ஷாவ்மி அறிமுகம் செய்துள்ளது.
இந்த குளிரூட்டி 15 விநாடிகளில் அறையை குளுமையாக்கிவிடும். இதேபோன்று 30 விநாடிகளில் அறையை கதகதப்புடையதாக்கிவிடும் என ஷாவ்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனம் வீட்டு உபயோக மின்னணுப் பொருள்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் புதிதாக மிஜியா என்ற பெயரில் குளிரூட்டியை அறிமுகம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
சீனாவில் இதன் விலை 2,699 யுவான். இந்திய மதிப்பில் 36,920 ரூபாய். இந்த குளிரூட்டியை ஜேடி.காம் என்ற இணையதளத்தில் வாங்கலாம்.
சிறப்பம்சங்கள்
13cc இரட்டை சிலிண்டர் கம்ப்ரசர் உடையது.
குறைந்த மின்னூட்டத்திலும் 30% வரை நிலைத்தன்மை உடையது.
குளிரூட்டியின் சப்தம் 5% வரை குறைவு.
செம்பு கண்டென்சர்கள், எவாப்பரேட்டர் உடையது.
மேம்பட்ட குளிரூட்டல் மற்றும் வெப்பமயமாக்கல் தன்மை உடையது.
118மி.மீ. விட்டம் உடைய பெரிய விசிறி கொண்டுள்ளது.
காற்றின் வீச்சு 900m³/h ஆக இருக்கும்
கோடைக்காலத்தில் 15 விநாடிகளில் அறையை குளுமையாக்கிவிடும்
குளிர்காலத்தில் 30 விநாடிகளில் அறையை கதகதப்பாக்கிவிடும்.
தீவிர காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த குளிரூட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 55°C வரை வெப்பம் உழிமும்.
அதிகபட்சமாக -15°C வரை குளுமையை பரப்பும்.
குளிரூட்டியின் எடை 11.5 கிலோ. வெளியே வைக்கும் யூனிட் எடை 27 கிலோ.
Xiaomi launches new split air conditioner with 15-second cooling and 30-second heating
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.