FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரே நாளில் 5 தங்கம் உள்பட 27 பதக்கங்கள் வென்ற இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டில் ஒன்று ஒரே நாளில் 27 பதக்கங்கள் வென்ற இந்தியா குறித்து...

ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள் - படங்கள்: எக்ஸ் / தூர்தர்ஸன் ஸ்போர்ட்ஸ்
பகிர்:

ஆசிய பாரா விளையாட்டில் ஒன்று ஒரே நாளில் இந்திய அணியினர் ஐந்து தங்கம் உள்பட 27 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்கள்.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இதுவரை மொத்தமாக இந்தியாவுக்கு 14 தங்கம், 22 வெள்ளி, 26 வெண்கலம் உள்பட 62 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் ஒரே நாளில் 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

ஐந்து தங்கப் பதக்கங்கள்

இன்று (அக்.21) திலீப் கவிட் 100 மீட்டர் தடகளத்தில் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். குண்டு எறிதலில் ஆயுஷ் வெர்மா, தடகளத்தில் சிம்ரன் தங்கம் வென்றார்கள்.

சச்சின் கிலாரி தேசிய சாதனையுடன் குண்டு எறிதலில் தங்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

11 வெள்ளிப் பதக்கங்கள்

பன்டி (ஆடவர் உயரம் தாண்டுதல் T44/64), பாக்கியஸ்ரீ ஜாதவ் (மகளிர் குண்டு எறிதல் F34), முகமது யாசர் (ஆடவர் குண்டு எறிதல் F46), மன்ஜீத் (ஆடவர் ஈட்டி எறிதல் F12/13), பிரீத்தி பால் (மகளிர் 100மீ T35), முகமது பேசில் (ஆடவர் 100மீ T47), அகிரா பனோத்து (ஆடவர் 400மீ T35/38) மற்றும் ஷரத் மகானஹள்ளி (ஆடவர் 1500மீ T12/13) உள்பட 11 பேர் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்கள்.

11 வெண்கலப் பதக்கங்கள்

அனுபவ் சௌத்ரி (ஆடவர் 100மீ T35), பிரவீன் (ஆடவர் குண்டு எறிதல் F46), ராகேஷ்பாய் பட் (ஆடவர் 100மீ T37), ரவி ரோங்காலி (ஆடவர் குண்டு எறிதல் F40), சுக்செயின் (ஆடவர் ஈட்டி எறிதல் F55), பிரணவ் தேசாய் (ஆடவர் 100மீ T64), சைலேஷ் குமார் (ஆடவர் நீளம் தாண்டுதல் T42/61/63), கரம்ஜோதி தலால் (மகளிர் வட்டு எறிதல் F55) மற்றும் ஹானி (ஆடவர் வட்டு எறிதல் F37) ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றனர்.

பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா, மூன்றாம் நாள் முடிவில் இறுதியில் ஐந்தாம் இடத்துக்கு கீழிறங்கியது. சீனா 226 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.

summary

Team India won 27 medals on Day 3 of the 2026 Asian Para Games in Aichi-Nagoya, Japan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments