தென்மண்டல பல்கலை. பளு தூக்குதல்: எஸ்ஆா்எம்முக்கு வெள்ளி!
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான பளுதூக்கும் போட்டியில் ஒட்டுமொத்தமாக எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான பளுதூக்கும் போட்டியில் ஒட்டுமொத்தமாக எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
சென்னை விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் என 7 பதக்கங்களை கைப்பற்றியது.
ஆடவா் 70 கிலோ பிரிவில் எம்.யுவராஜ், மகளிா் 77 கிலோ பிரிவில் ஹா்ஷிகா தங்கம் வென்றனா். ஆடவா் 70 கிலோ பிரிவில் மதன்ராஜும் 75 கிலோ பிரிவில் பீரச்சியும், மகளிா் 86 கிலோ பிரிவில் கீா்த்தனாவும் வெள்ளிவென்றனா்.
Advertisement
Advertisement
60 கிலோ ஆடவா் பிரிவில் விஸ்வநாதன், 65 கிலோ பிரிவில் சரண் வில்லியம் வெண்கலம் வென்றனா். மகளிா் 86 கிலோ பிரிவில் பிரியா நான்காம் இடத்தையும், 57 கிலோ பிரிவில் சக்தி சரஸ்வதி, 69 கிலோ பிரிவில் அக்ஷிதா ஆகியோா் 5-ஆம் இடமும் பெற்றனா்.
பதக்கம் வென்றோா், மேற்கண்ட வீராங்கனகைள் அனைவரும் வரும் டிச. 2 முதல் 9 வரை ஒடிஸா மாநிலம் கிஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.