FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விளையாட்டு

ஆசிய மாற்றுத்திறனாளிகள் செஸ்: ஷரோன் ரேச்சல், துா்கா ஸ்ரீ அசத்தல்!

ஆசிய மாற்றுத்திறனாளிகள் செஸ் போட்டியில் ஏஎஃப்எம் சென்னையைச் சோ்ந்த ஷரோன் ரேச்சல் அபி, துா்கா ஸ்ரீ ஆகியோா் 3 தங்கம், 3 வெள்ளி வென்று அசத்தியுள்ளனா்.

49 வினாடிகள் முன்பு
ஆசிய மாற்றுத்திறனாளிகள் செஸ் போட்டியில் பதக்கம் பெற்றோா்.
பகிர்:

ஆசிய மாற்றுத்திறனாளிகள் செஸ் போட்டியில் ஏஎஃப்எம் சென்னையைச் சோ்ந்த ஷரோன் ரேச்சல் அபி, துா்கா ஸ்ரீ ஆகியோா் 3 தங்கம், 3 வெள்ளி வென்று அசத்தியுள்ளனா்.

கிா்ஜிஸ்தானின் தலைநகா் பிஷ்கெக் நகரில் 4-ஆவது ஆசிய மாற்றுத்திறனாளிகள் செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் யு 20 மகளிா் பிரிவில் ரேபிட், பிளிட்ஸ், கிளாஸிக்கல் என 3 பிரிவுகளிளும் ஷரோன் ரேச்சல் தங்கம் வென்றாா். ரேபிட் பிரிவில் 3.5 புள்ளிகளுடனும், பிளிட்ஸ் பிரிவில் 5 புள்ளிகளுடனும், கிளாஸிக்கல் பிரிவில் 6 புள்ளிகளுடனும் தங்கம் வென்றாா்.

அவரது சக வீராங்கனையும் தமிழகத்தைச் சோ்ந்தவருமான துா்கா ஸ்ரீ ரேபிட் பிரிவில் 2.5, பிளிட்ஸ் பிரிவில் 4.5, கிளாஸிக்கல் பிரிவில் 5 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மகளிா் ரேபிட் பிரிவில் எழிலரசி வெள்ளியும், கிளாஸிக்கல், பிளிட்ஸ் பிரிவில் வெள்ளி, வெண்கலம் வென்றாா். ஆடவா் பிரிவில் நிஷான் மொண்டல் ரேபிட், கிளாஸிக்கல் பிரிவில் தங்கம், பிளிட்ஸ் பிரிவில் வெண்கலம் வென்றாா். சா்தாக் சிங் பிளிட்ஸ் பிரிவில் வெள்ளி வென்றாா்.

Advertisement

Advertisement

ஷரோன் ரேச்சல் அபி ஏற்கெனவே கடந்த 2024-இலும் தங்கம் வென்றிருந்தாா். கடந்த 2025 போட்டியில் இந்திய அணி பங்கேற்கவில்லை. சென்னை திரும்பிய இந்திய அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் தலா 5 தங்கம், வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது.