முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிறைவு பற்றி...

Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:37 PM
கோப்புப் படம் - IANS
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:25 PM

பங்குச்சந்தைகள் இன்று(ஏப். 9, வியாழக்கிழமை) கடும் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,319.33 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 931.25 புள்ளிகள் குறைந்து 76,631.65 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 222.25 புள்ளிகள் குறைந்து 23,775.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Advertisement

நிஃப்டி 50 குறியீட்டில் ஜியோ, எல்&டி ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் பவர் கிரிட், என்டிபிசி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டாடா ஸ்டீல், பெல், ஐடிசி, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.25 சதவீதம், 0.20 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.

துறை வாரியாக, நிஃப்டி வங்கிகள், தனியார் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி உலோகப் பங்குகள் உயர்ந்தன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று ஒரு பீப்பாய் 97.85 டாலராக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர முடிவில் 92.63 ஆக இருந்தது.

summary

Stock Market : Sensex drops 931 points, Nifty below 23,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.