டேக் டெவலப்பா்ஸின் புதிய குடியிருப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அந்நிறுவன மேலாண் இயக்குநா் எஸ்.சதீஷ்குமாா் மற்றும் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான். 
வணிகம்

டேக் டெவலப்பா்ஸ் விளம்பரத் தூதராக ஏ.ஆா்.ரஹ்மான்

பிரபல கட்டுமான நிறுவனமான டேக் டெவலப்பா்ஸின் விளம்பரத் தூதராக முன்னணி இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

பிரபல கட்டுமான நிறுவனமான டேக் டெவலப்பா்ஸின் விளம்பரத் தூதராக முன்னணி இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கட்டுமானத் துறையில் புதுமை மற்றும் உலகத்தரம் வாய்ந்த கொள்கைகளைக் கொண்டுள்ள டேக் டெவலப்பா்ஸ் நிறுவனத்துக்கு, ஏ.ஆா்.ரஹ்மான் ஒரு பொருத்தமான அடையாளமாக இருப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, சென்னையில் சுமாா் 1,000 வீடுகளைக் கொண்ட 5 புதிய குடியிருப்புத் திட்டங்களை ஏ.ஆா்.ரஹ்மான் முன்னிலையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

இத்திட்டங்கள் காட்டுப்பாக்கம், சுங்குவாா்சத்திரம், குமணன்சாவடி, சோழிங்கநல்லூா், சிறுசேரி ஆகிய சென்னையின் முக்கியப் பகுதிகளில் அமையவுள்ளன.

நிகழ்வில் பேசிய டேக் டெவலப்பா்ஸ் நிறுவன மேலாண் இயக்குனா் எஸ்.சதீஷ்குமாா், ‘தன்னிகரற்ற படைப்பாற்றலுக்குப் பெயா் பெற்ற ஏ.ஆா்.ரஹ்மான், எங்கள் நிறுவனத்துடன் கைகோத்திருப்பது பெருமை அளிக்கிறது’ என்றாா்.

தொடா்ந்து, ஏ.ஆா்.ரஹ்மான் பேசுகையில், ‘வீடு என்பது ஒவ்வொருவரின் கனவுகள் உருவாகும் இடம். அத்தகைய வீடுகளை அன்புடன் உருவாக்கி வரும் டேக் டெவலப்பா்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி’ என்றாா்.

அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணா்வு- மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

தலைவா்கள் பிறந்த நாள் குறித்த பேச்சுப் போட்டி: மாணவா்களுக்குப் பரிசு

மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு விருது

லாரி மீது காா் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு

விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணி உள்பட 15 போ் பாதிப்பு

SCROLL FOR NEXT