முகப்பு
வணிகம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை பற்றி..

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 10:01 AM
தங்கம் விலை உயர்வு
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் - வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிய தொடங்கியது.

முன்னதாக, வர்த்தகத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்ட நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் தங்கம் ரூ. 80 உயர்ந்து ரூ. 14,030-க்கும், ஒரு சவரன் ரூ. 640 உயர்ந்து ரூ. 1,12,240-க்கு விற்பனையானது.

பிற்பகல் வர்த்தகம் நிறைவுபெறும்போது தங்கத்தின் விலை மேலும் ரூ.240 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரேநாளில் கிராமுக்கு ரூ.320-ம் சவரனுக்கு ரூ.2,560-ம் உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் இருமுறை உயர்ந்த நிலையில் ஒரு சவரன் ரூ. 14,270-க்கும், ஒரு சவரன் ரூ, 1,14,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை மேலும் குறைந்து ஒரு கிராம் ரூ. 280-க்கும், ஒரு கிலோ ரூ. 2,80,000-க்கும் விற்கப்பட்டது.

பிற்பகலில் ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ. 300-க்கும், ஒரு கிலோ 20 ஆயிரம் உயர்ந்து ரூ. 3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

The price of gold jewellery in Chennai has risen again, causing shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.