சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 28) ஒரே நாளில் இரண்டாவது முறையாக மொத்தம் ரூ. 5,200 உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்றத்தன்மை, உலக நாடுகள் தங்கத்தை அதிக அளவில் சேமித்து வைப்பது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,19,680-க்கும் விற்பனையானது.
இதனிடையே, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 28) காலை கிராமுக்கு ரூ. 370 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,330-க்கும் சவரனுக்கு ரூ. 2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,22,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக தங்கத்தின் விலை மீண்டும் கிராமுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,610-க்கும் சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,24,880-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல, வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.400-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.13,000 உயர்ந்து ரூ. 4,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.