முகப்பு
வணிகம்

ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 90.43 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.90.43 ஆக நிலைபெற்றது.

Updated On : 4 பிப்ரவரி 2026, 4:49 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய வர்த்தகத்தில் 11 காசுகள் சரிந்து ரூ. 90.43ஆக நிலைபெற்றது.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட பெரும் ஏற்றத்திற்குப் பிறகு, நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் டாலரை வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.90.43ஆக முடிவடைந்தன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.35 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, தொடக்கத்தில் உயர்ந்து ரூ.90.26 ஆகவும், பிறகு சரிந்து ரூ.90.54 ஆக வர்த்தகமானது. இறுதியில், ரூபாய் முந்தைய நாள் முடிவடைந்த நிலையிலிருந்து 11 காசுகள் சரிந்து ரூ.90.43 என்ற அளவில் நிலைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து முதலீட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதால், முந்தைய அமர்வில் ஏற்பட்ட பெரும் ஏற்றத்திற்குப் பிறகு, இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு சரிந்தது.

summary

The rupee depreciated 11 paise to 90.43 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.