கோப்புப் படம் 
வணிகம்

வார இறுதியில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு!

சென்செக்ஸ் 266.47 புள்ளிகள் உயர்ந்து 83,580.40 புள்ளிகளாகவும், நிஃப்டி 50.90 புள்ளிகள் உயர்ந்து 25,693.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை உயர்வுடன் முடிவடைந்தன.

ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தபடியே அதன் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்ததாலும், ரியல் எஸ்டேட் துறைக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்தப்படும் நோக்கில் சில பாதுகாப்பு அம்சங்களுடன் ரியல் எஸ்டேடில் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு வங்கிகள் கடன் வழங்க அனுமதிக்க முன்மொழிந்ததாலும், பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் நிறைவடைந்தன.

வர்த்தக இறுதியில், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 266.47 புள்ளிகள் உயர்ந்து 83,580.40 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 50.90 புள்ளிகள் உயர்ந்து 25,693.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் இன்றைய குறைந்தபட்ச நிலையான 82,925.35 புள்ளிகளிலிருந்து, வர்த்தக முடிவில் சுமார் 655.05 புள்ளிகள் உயர்ந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் இருந்தாலும், பட்ஜெட்டில் அரசின் செலவினங்கள் அதிகரித்ததாலும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு வரி அழுத்தங்கள் சற்றே குறைந்ததாலும், வளர்ச்சி குறித்த கவலைகள் தணிந்ததாலும், ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தபடியே வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது பங்குச் சந்தையின் எழுச்சிக்கு உதவியது.

சென்செக்ஸில் இன்று ஐடிசி 5.09% உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை உயர்ந்தன. மறுபுறம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், எடர்னல் மற்றும் எச்.சி.எல் டெக் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை சரிந்த நிலையில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு உயர்வுடன் நிலைபெற்றது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் வர்த்தகமாகின.

அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன. நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 1.59% சரிந்தும், எஸ்&பி 500 குறியீடு 1.23% சரிந்த நிலையில், டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1.20% வரை சரிந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 2,150.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய், 1.20% உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.34 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகு என்ற சொல்லுக்கு...

கங்கை கொண்ட சோழீசுவரம்!

நோய்களைத் தீர்க்கும் அம்மன்

சிங்கப்பூர் பெண்ணிடம் ரூ. 1.9 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளிக்கு 23 மாதங்கள் சிறை!

வெடிகுண்டு மிரட்டல்: அம்பாலா நீதிமன்ற வளாகத்தில் சோதனை

SCROLL FOR NEXT