தொடரும் பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,205, நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்வு!
சென்செக்ஸ் 1,205 புள்ளிகள் உயர்ந்து 75,273.45 புள்ளிகளாகவும், நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்ந்து 23,306.45 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: அமெரிக்கா-ஈரான் பதற்றம் தணியக்கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பங்குச் சந்தை வர்த்தகம் இன்றும் வலுவாகத் தொடங்கி வர்த்தகமானது.
தொடர்ந்து 2-வது நாளாக ஏற்றம் கண்ட நிலையில், வர்த்தக நேரம் முழுவதும் ஏற்றத்தைத் பதிவு செய்த சென்செக்ஸ் மற்றம் நிஃப்டி குறியீடு கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை உயர்ந்து நிறைவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,781.31 புள்ளிகள் உயர்ந்து 75,849.76 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,205 புள்ளிகள் உயர்ந்து 75,273.45 புள்ளிகளாகவும், வர்த்தக நேரம் முழுவதும் தனது ஏற்றத்தைத் தொடர்ந்த நிஃப்டி 394.05 புள்ளிகள் உயர்ந்து 23,306.45 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், செவ்வாய்க்கிழமை இருந்த ரூ. 423.16 லட்சம் கோடியிலிருந்து ரூ. 7.82 லட்சம் கோடியாக உயர்ந்து ரூ. 430.99 லட்சம் கோடியாக அதிகரித்தது.
சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ, டைட்டன், இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் ட்ரென்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் டெக் மஹிந்திரா, பவர் கிரிட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டைட்டன் மற்றும் கிராசிம் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் டெக் மஹிந்திரா, பவர் கிரிட் மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 2.3% மற்றும் ஸ்மால்கேப் குறியீடு 2.6% உயர்ந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்த நிலையில் ஐரோப்பிய சந்தையும் உயர்ந்து வர்த்தகமானது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 8,009.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,867.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
கலவையான கருத்துகள் இருந்தபோதிலும், அமைதிக்கான நம்பிக்கை வெளிப்படத் தொடங்கியதால், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய முன்னேற்றமானது, கச்சா எண்ணெயின் விலையை 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிய வைத்தது. உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 5.07 சதவீதம் சரிந்து 99.19 அமெரிக்க டாலராகக் உள்ளது.
ஸ்ரீ ராம நவமி விடுமுறையை முன்னிட்டு, மார்ச் 26-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian equity indices extended their relief rally for the second consecutive session on March 25, with the Nifty closing above the 23,300 mark.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.