மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!
சென்செக்ஸ் 47.01 புள்ளிகள் உயர்ந்து 77,616.40 புள்ளிகளிலும், நிஃப்டி 4.10 புள்ளிகள் உயர்ந்து 24,211 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: இன்றைய தொடக்க வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து முக்கிய குறியீடுகள் மீண்டன. இன்றைய வர்த்தகத்தில், சிறப்பான மீட்சியை வெளிப்படுத்தி ஐடி துறை, எஃப்எம்சிஜி, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சரிவை சமம் செய்தன.
உலகளாவிய பங்குச் சந்தை நிலவரங்கள் கலவையாக இருந்ததால், உள்ளூர் பங்குச் சந்தை பலவீனமான நிலையிலேயே தொடங்கி வர்த்தகமானது. இதனால் நிஃப்டி குறியீடு வர்த்தகத்தின் இடையே 24,000.20 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது. இருப்பினும், ஐடி, ஊடகம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் சார்ந்த பங்குகளில் தென்பட்ட ஆர்வத்தால், காலை நேர வர்த்தகத்தில் உள்ள இழப்புகளை சமம் செய்து, வர்த்தக முடிவில் முக்கிய குறியீடுகள் உயர்ந்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 47.01 புள்ளிகள் உயர்ந்து 77,616.40 புள்ளிகளிலும், நிஃப்டி 4.10 புள்ளிகள் உயர்ந்து 24,211 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் மாற்றமின்றி நிறைவடைந்தன.
நிஃப்டி-யில் டிசிஎஸ் பங்குகள் 5.4% உயர்ந்து முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் மற்றும் பஜாஜ் ஆடோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் எடர்னல் ஆகிய பங்குகளை தொடர்ந்து கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2% சரிவுடன் நிறைவடைந்தன.
துறை வாரியாகப் பார்க்கையில், நிஃப்டி-யில் ஐடி துறை சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி 3.6% உயர்ந்த நிலையில், மீடியா பங்கு 2 சதவீதமும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் 1 சதவிதமும், ஆட்டோ 0.45 சதவீதமும், தனியார் வங்கித் 0.30 சதவீதமும் உயர்ந்தன. மறுபுறம் எஃப்எம்சிஜி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 1 சதவீதமும், மெட்டல் 0.7 சதவீதமும் மற்றும் இன்ஃப்ரா 0.5% சரிந்தன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வர்த்தகத்தின் இடையே ஏற்பட்ட இழப்பைச் சற்று குறைத்தாலும், முந்தைய நாள் முடிவான ரூ. 95.32 லிருந்து 30 காசுகள் சரிந்து ரூ. 95.62 ஆக நிறைவடைந்தன.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு கிட்டத்தட்ட 7 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் வர்த்தகமானது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,603.72 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, 3.96 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 79.02 அமெரிக்க டாலகாக உள்ளது.
Benchmark indices recovered smartly from early losses to close marginally higher on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.