FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

நீதிக் கதைகள்! புகழ் எனும் போதை!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

Updated On : 13 ஜூலை 2026, 4:54 pm IST
பகிர்:

செல்வந்தன் ஒருவனும் ஏழை ஒருவனும் சந்தித்துக் கொண்டனர். அப்போது புகழுரைக்கு ஆசைப்பட்ட செல்வந்தன், 'என்னிடம் நூறு பொற்காசுகள் இருக்கின்றது. அதில் இருபது காசு உனக்குத் தருகிறேன். என்னைப் பற்றி புகழ்ந்து பேசு' என்றான் அந்த ஏழையைப் பார்த்து.

'நீ தரும் இருபது காசுக்காக புகழ்ந்து பேச முடியாது. பங்கு சரியாக இல்லை' என்றான் ஏழை.

'சரி. உனக்கு சரி பாதியாக ஐம்பது காசுகள் தருகிறேன். புகழ்ந்து பேசு' என்றான்.

Advertisement

Advertisement

'என்னிடமும் உன்னிடமும் சரிசமமாக பொற்காசுகள் இருக்கும்போது, நான் ஏன் உன்னைப் புகழ்ந்து பேச வேண்டும்?' என்றான்.

 எப்படியாவது அவனிடமிருந்து புகழ்ச்சி உரையைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பணக்காரன், 'மொத்தமாகத் தன்னிடமிருந்த நூறு காசுகளையும் ஏழையிடம் கொடுத்து, இப்போது புகழ்ந்து பேசு' என்றான்.

அந்த நூறு காசுகளையும் பெற்றுக்கொண்ட அந்த ஏழை, 'இப்போது என்னிடம் நூறு பொற்காசுகள் உள்ளன. நான் பணக்காரன். நீ ஏழை. நான் ஏன் உன்னைப் புகழ்ந்து பேச வேண்டும்?' என்றான்.

summary

A moral story that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments