முகப்பு
வணிகம்

டோரண்ட் பவர் 3வது காலாண்டு லாபம் ரூ. 655 கோடியாக அதிகரிப்பு!

டோரண்ட் பவர் டிசம்பர் வரையான காலாண்டில், அதன் நிகர லாபம் ரூ. 654.74 கோடியாக உயர்திருப்பதாக தெரிவித்துள்ளது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:14 PM
டோரண்ட் பவா் நிறுவனம் - கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: டோரண்ட் பவர் டிசம்பர் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கிட்டத்தட்ட 34% உயர்ந்து ரூ.654.74 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.489.33 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.6,671.25 கோடியாக இருந்த அதன் மொத்த வருமானம், நிதியாண்டின் காலாண்டில் ரூ.6,847.02 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் நிறுவனம் 150% ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.10 மதிப்புள்ள பங்குகளுக்கு ரூ.15 வழங்கவும் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இடைக்கால ஈவுத்தொகை மார்ச் 12, 2026 அன்று அல்லது அதற்கு முன் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

summary

Torrent Power on Tuesday posted nearly 34 per cent rise in consolidated net profit to Rs 654.74 crore in the December quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.