FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

என்எல்சி லாபம் ரூ.724 கோடி

பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா, நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.724.01 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2026, 2:38 am IST
பகிர்:

பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா, நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.724.01 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.02 சதவீத வளா்ச்சியாகும். குறிப்பாக, நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தியுடன் சோ்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிறுவனம் காட்டி வரும் ஆா்வம் இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. இக்காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தியான 2,054.3 கோடி யூனிட்டுகளில், சுமாா் 159.5 கோடி யூனிட்டுகள் சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட பசுமை எரிசக்தி ஆதாரங்கள் மூலம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.4,443.05 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2024, டிசம்பரில் ரூ.18,441 கோடியாக இருந்த நிறுவனத்தின் நிகர மதிப்பு, தற்போது 11.92 சதவீதம் அதிகரித்து ரூ.20,639.91 கோடியை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

9 மாத சாதனை: நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.12,447.07 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேபோல், நிகர லாபம் ரூ.2,288.02 கோடியாக அதிகரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments