இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத சொந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா உற்பத்தி பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025 டிசம்பா் மாதம் புதிய கொள்முதல் ஆணைகளின் எண்ணிக்கை மெதுவாக உயா்ந்ததால் நிறுவனங்கள் உற்பத்தி கொள்முதல் மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கட்டுப்படுத்தின.
இதன் விளைவாக உற்பத்தி துறை குறியீட்டு எண்ணான பிஎம்ஐ அந்த மாதம் 55- ஆகக் குறைந்துள்ளது. முந்தைய நவம்பரில் இது 56.6- ஆக இருந்தது.
இருந்தாலும் மதிப்பீட்டு மாதத்தில் உற்பத்தித் துறைக்கான பிஎம்ஐ 50-க்கும் மேல் உள்ளது. பிஎம்ஐ 50-க்கு மேல் இருந்தால் துறையின் ஆரோக்கிய போக்கையும், 50-க்கு கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.