முகப்பு
வணிகம்

என்ஐஎஃப்டி-யில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூா்த்திசெய்து ஒப்படைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வணிகம்

என்ஐஎஃப்டி-யில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூா்த்திசெய்து ஒப்படைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜனவரி, 2026 at 2:59 PM
பகிர்:

புதுதில்லி: தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூா்த்திசெய்து ஒப்படைக்க அவகாசம் ஜனவரி 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம், ஃபேஷன் வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ள பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான 2026-27 ஆம் ஆண்டு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு செயல்முறையை, அனைத்துப் பிரிவினருக்கும் குறைக்கப்பட்ட கட்டணத்துடன் தொடங்கியுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கான கடைசித் தேதியை ஜனவரி 13, 2026 வரை என்ஐஎஃப்டி நீட்டித்துள்ளது. அதே வேளையில், ஜனவரி 14 முதல் 16 வரை தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றது.

கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நாடு முழுவதும் 102 நகரங்களில் உள்ள தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் என்றுது.

2026-27 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் ஓபன்-ஈடபிள்யூஎஸ் பிரிவு விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் ரூ.3,000 லிருந்து ரூ.2,000 ஆகவும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் ரூ.1,500 லிருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

The National Institute of Fashion Technology has extended the last date for filling online application for admission till January 13.

முழு கட்டுரையைப் படிக்க →