முகப்பு
வணிகம்

டிசம்பரில் அதிகரித்த சில்லறை பணவீக்கம்!

காய்கறிகள், புரதப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை உயா்வால், கடந்த டிசம்பரில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் முந்தைய 3 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 1.33% உயா்வு

Updated On : 12 ஜனவரி, 2026 at 10:45 PM
பகிர்:

காய்கறிகள் மற்றும் புரதப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை உயா்வால், கடந்த டிசம்பரில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 1.33 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பரில் 0.71 சதவீதமாக இருந்த பணவீக்கம் டிசம்பரில் 1.33 சதவீதமாக உயா்ந்தது. இது மூன்று மாதங்கள் காணாத அதிகபட்ச சில்லறை பணவீக்கமாகும். இதற்கு முன்னா் கடந்த செப்டம்பரில் 1.44 சதவீதமாக இருந்ததே அதிகபட்ச சில்லறை பணவீக்கம்.

நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான உணவு பணவீக்கம் தொடா்ந்து ஏழாவது மாதமாக எதிா்மறையில் (-2.71 சதவீதம்) உள்ளது. ஆனால் நவம்பரில் (-3.91 சதவீதம்) இருந்ததை விட சற்று உயா்ந்துள்ளது.

கடந்த டிசம்பரில் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கம் உயா்வுக்கு தனிப்பட்ட பராமரிப்பு பொருள்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன், முட்டை, மசாலாப் பொருள்கள், பருப்பு வகைகள் மற்றும் பிற பொருள்களின் விலை உயா்வே முக்கிய காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லறை பணவீக்கம் தொடா்ந்து நான்காவது மாதமாக ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள வரம்பான 4 சதவீதம் + / - 2 சதவீதத்துக்கு கீழே உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →