மும்பை: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், டிசம்பர் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் 13.91% சரிந்து ரூ.10,657 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், 2025 நிதியாண்டின் அக்டோபர் முதஸ் டிசம்பர் வரையான காலகட்டத்தில் ரூ.12,380 கோடியும், அதற்கு முந்தைய செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.12,075 கோடியும் நிகர லாபம் ஈட்டியிருந்தது.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 4.86% அதிகரித்து, ரூ.63,973 கோடியிலிருந்து ரூ.67,087 கோடியாக உயர்ந்தது.
நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில், 3-வது காலாண்டில் செயல்பாட்டு லாப வரம்பு, செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 25.2% நிலையாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 24.5% விட அதிகம்.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்கின் விலை 0.86% உயர்ந்து ரூ.3,235.70ஆக நிறைவடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.