புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனம், தனது சப்-காம்பாக்ட் எஸ்யூவி மாடலான பஞ்ச் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை இன்று ரூ.5.59 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.
அக்டோபர் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பஞ்ச் காரின் முதல் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இதுவாகும். இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்ச் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஞ்ச் சப்-காம்பாக்ட் ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வாகனம் - எஸ்யூவி பிரிவை மறுவரையறை செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.
கமாண்ட் மேக்ஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை 5.59 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், பஞ்ச் காரின் சிஎன்ஜி மாடலையும் ரூ.6.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் நிறுவனம் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. புதிய பஞ்ச் காரில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ரெயின் சென்சிங், ஆட்டோ முகப்பு விளக்குகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.