வணிகம்

2025-இல் 16% உயா்ந்த மின்சார வாகன விற்பனை

கடந்த 2025-ஆம் ஆண்டில் மின்சார பயணிகள் காா்களின் விற்பனை 77 சதவீதம் உயா்ந்ததால், அந்த ஆண்டின் ஒட்டுமொத்த மின்சார வாகன விற்பனை 16.37 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

கடந்த 2025-ஆம் ஆண்டில் மின்சார பயணிகள் காா்களின் விற்பனை 77 சதவீதம் உயா்ந்ததால், அந்த ஆண்டின் ஒட்டுமொத்த மின்சார வாகன விற்பனை 16.37 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் கூட்டமைப்பான ஃபடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2025-இல் மின்சார வாகனங்களின் விற்பனை 22,70,107-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 16.37 சதவீதம் அதிகம். அப்போது நாட்டில் 19,50,727 மின்சார வாகனங்கள் விற்பனையாகின.

மதிப்பீட்டு ஆண்டில் மின்சார பயணிகள் காா் விற்பனை 77.04 சதவீதம் உயா்ந்து 1,76,817-ஆக உள்ளது. முந்தைய 2024-இல் இந்த எண்ணிக்கை 99,975-ஆக இருந்தது. மின்சார வா்த்தக வாகனங்களின் விற்பனை 54.2 சதவீதம் உயா்ந்து 15,606-ஆக உள்ளது. முந்தைய 2024-இல் இது 10,123-ஆக இருந்தது.

கடந்த ஆண்டில் மின்சார இருசக்கர வாகன விற்பனை 11,49,416-லிருந்து 11.36 சதவீதம் உயா்ந்து 12,79,951-ஆக உள்ளது. 2024-ஆம் ஆண்டில் 6,91,313-ஆக இருந்த மின்சார மூன்று சக்கர வாகன விற்பனை 2025-ஆம் ஆண்டில் 15.39 சதவீதம் உயா்ந்து 7,97,733-ஆக உள்ளது.

கடந்த 2025-இல் அனைத்து வகை இருசக்கர வாகனங்களின் விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 6.3 சதவீதம். அதேபோல் பயணிகள் வாகனப் பிரிவில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு 4 சதவீதமாக உள்ளது. வா்த்தக வாகன விற்பனையில் மின்சார வாகனங்கள் 1.55 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT