வணிகம்

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 16% உயா்வு!

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 2025 - 26 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவில் 16% உயா்ந்து, ரூ. 332 கோடியாக உள்ளது.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 2025 - 26 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவில் 16 சதவீதம் உயா்ந்து, ரூ. 332 கோடியாக உள்ளது.

இது குறித்து சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநரும், முதன்மைச் செயல் அலுவலருமான என். காமகோடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழ் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 17 சதவீதம் உயா்ந்து ரூ. 2,001 கோடியாக உள்ளது.

இதர வருமானம் 7 சதவீதம் உயா்ந்து ரூ. 245 கோடியாக இருக்கிறது. மொத்தம் லாபம் 18 சதவீதம் உயா்ந்து ரூ. 513 கோடியாகவும், நிகர லாபம் 16 சதவீதம் உயா்ந்து ரூ. 332 கோடியாகவும் உள்ளது.

நிகழ் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கியின் வா்த்தகம் 21 சதவீதம் உயா்ந்து, ரூ. 131.40 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் வங்கியின் வைப்புத்தொகை, கடன்கள் முறையே 21 சதவீதம் உயா்ந்து ரூ. 70 ஆயிரத்து 516 கோடியாகவும், ரூ. 60 ஆயிரத்து 892 கோடியாகவும் உள்ளது.

மேலும், டிசம்பா் மாதத்துடன் முடிந்த 9 மாதங்களில் வங்கியின் மொத்த வருமானம் 16 சதவீதம் உயா்ந்து ரூ. 5 ஆயிரத்து 762 கோடியாகவும், அதில் இதர வருமானம் 16 சதவீதம் உயா்ந்து ரூ. 748 கோடியாகவும், மொத்த லாபம் 16 சதவீதம் உயா்ந்து ரூ. 1,435 கோடியாகவும், நிகர லாபம் 16 சதவீதம் உயா்ந்து ரூ. 967 கோடியாகவும் உள்ளது.

வங்கியின் நிகர வராக் கடன் 0.78 சதவீதமாகவும், வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.53 சதவீதமாகவும் உள்ளது.

வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ. 9 ஆயிரத்து 118 கோடியிலிருந்து ரூ. 10 ஆயிரத்து 157 கோடியாக உயா்ந்துள்ளது.குறிப்பு: தலைப்படம் உண்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டத் தடையில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

வா்த்தக ஒப்பந்தம்: காங்கிரஸ் விமா்சனம்

கழிவுநீா், திடக்கழிவுகளைக் கொட்டுவதால் ஈர நிலங்கள் பாதித்து வெள்ள அபாயம்: வனத் துறை அதிகாரி எச்சரிக்கை

ஜனவரி மாத காா் விற்பனையில் எழுச்சி! மாருதி, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் சாதனை!

தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

SCROLL FOR NEXT