3 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறும் யமஹா!
யமஹா நிறுவனம் குறைபாடுள்ள பிரேக் பாகத்தைச் சரிசெய்ய 3 லட்சத்திற்கும் அதிகமான வாகனத்தை திரும்பப் பெறுவதாக இன்று தெரிவித்துள்ளது.
புதுதில்லி: இந்தியாவில் மிகவும் பிரபலமான யமஹா நிறுவனம் குறைபாடுள்ள பிரேக் பாகத்தைச் சரிசெய்ய ரே-இசட்-ஆர் 125 எஃப்.ஐ ஹைப்ரிட் மற்றும் ஃபாசினோ 125 எஃப்.ஐ ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களின் 3 லட்சத்திற்கும் அதிகமான வாகனத்தை திரும்பப் பெறுவதாக இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் இன்று அறித்துள்ளது.
மே 2, 2024 மற்றும் செப்டம்பர் 3, 2025 ஆகிய தேதிகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட 125சிசி ஸ்கூட்டர் மாடல்களின் மொத்தம் 3,06,635 வாகனத்தை திரும்பப் பெறும் பிரசாரத்தை நிறுவனம் உடனடியாக தொடங்கியுள்ளதாக இந்தியா யமஹா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ரே-இசட்-ஆர் 125 எஃப் ஐ ஹைப்ரிட் மற்றும் ஃபாசினோ 125 எஃப் ஐ ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முன் பக்கம் உள்ள பிரேக் காலிபர் குறைந்த அளவில் அதன் செயல்பாட்டைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த பிரசாரத்தின் கீழ் வரும் அனைத்து வாகனங்களுக்கும் குறிப்பிட்ட பாகத்தை மாற்றுவதற்கு எந்தவிதக் கட்டணமுமின்றி இலவசமாக சரி செய்து செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
India Yamaha Motor said it is recalling over 3 lakh units RayZR 125 Fi Hybrid and Fascino 125 Fi Hybrid scooter models to rectify a faulty brake part.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.