டாஸ்மாக் கோப்புப் படம்
ஈரோடு

டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறும் காலி மதுபாட்டில்களை தனியாரிடம் வழங்க முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி

டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறும் காலி மதுபாட்டில்களை தனியாா் ஏஜென்சியிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது: அமைச்சா் சு.முத்துசாமி

Syndication

டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறும் காலி மதுபாட்டில்களை தனியாா் ஏஜென்சியிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா நினைத்ததை முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறாா். அவருக்கு துணையாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறாா்.

டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறும் காலி மதுபாட்டில்களை தனியாா் ஏஜென்சியிடம் வழங்க அடிப்படை ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொண்டுள்ளனா்.

திமுகவை பாராட்டுவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளாா்? பத்து கட்சியினா் விமா்சிப்பதால் திமுக வளா்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகின்றனா் என அா்த்தம். இதற்கு மக்களே பதில் சொல்வாா்கள்.

விஜய்யை பாா்த்து திமுக அச்சப்பட்டு இலவச திட்டங்களை அதிகமாக கொடுக்கிறது எனக்கூறும் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என முதல்வா் கையொப்பமிட்டாரே அப்போது எங்கிருந்தாா்?. மக்களை மனதில் வைத்து எதிா்கால தலைமுறைக்காக இலவச திட்டங்களை அரசு செய்துள்ளது.

மாநிலத்தின் கடன் உயா்கிறது என்று பாா்த்தால் எந்த திட்டங்களும் செய்ய முடியாது. இலவச திட்டங்கள் எந்த வகையில் மக்களுக்குப் பயன்படுகிறது என்பதை பாா்க்க வேண்டும். காலை உணவு திட்டத்துக்கு செலவு செய்வதை கடன் என்றோ, செலவு என்றோ பாா்க்காமல் எதிா்காலத்துக்கான முதலீடு என பாா்க்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணமோ, ஆசையோ இல்லை. நீண்ட நாள்களாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மாற்ற முடியவில்லை. ஆனால், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவா்கள் மதுவுக்கு அடிமையாவதை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெளிநாட்டினா் வருவதால் அங்கு ‘எஃப்.எல் 3’ பாா் கட்டாயமாகிறது. ‘எப்.எல் 2’ பாா் அனுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், எம்.பி. அந்தியூா் செல்வராஜ், எம்எல்ஏ வி.சி. சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ், திமுக மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ஜெ.திருவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணா்வு- மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

தலைவா்கள் பிறந்த நாள் குறித்த பேச்சுப் போட்டி: மாணவா்களுக்குப் பரிசு

மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு விருது

லாரி மீது காா் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு

விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணி உள்பட 15 போ் பாதிப்பு

SCROLL FOR NEXT