முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் மீண்டு ரூ.91.71ஆக நிறைவு!

இந்திய ரூபாய் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.91.71ஆக நிலைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2026 at 1:24 PM
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: டாலர் குறியீட்டில் ஏற்பட்ட சரிவு மற்றும் இந்தியா-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவையால், இந்திய ரூபாய் தனது வரலாறு காணாத குறைந்த அளவிளிருந்து மீண்டு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.91.71ஆக நிறைவடைந்தன.

இந்தியா-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த உடன்பாடு உள்நாட்டு சந்தை உணர்வுகளை ஊக்கப்படுத்தியது. இருப்பினும், அதிகரித்து வரும் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை, ரூபாயின் உயர்வை வெகுவாக தடுத்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ.91.82 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, டாலருக்கு நிகரான ஒரு கட்டத்தில் ரூ.91.90 என்ற நாளின் குறைந்தபட்ச நிலையைத் தொட்டு, பிறகு முந்தைய நாள் முடிவிலிருந்து 19 காசுகள் உயர்ந்து ரூ.91.71ஆக நிலைபெற்றது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு டாலர் ஒன்றுக்கு ரூ.92 என்ற வரலாற்றுச் சரிவை எட்டிய நிலையில், முடிவில் சற்று மீண்டு டாலாருக்கு நிகரான ரூ.91.90 என்ற அளவில் நிலைபெற்றது.

summary

The rupee rebounded from its all-time low levels and gained 19 paise to close at 91.71 against the US dollar on Tuesday.

முழு கட்டுரையைப் படிக்க →