ANI
வணிகம்

‘பேஸ்புக் இந்தியா’ லாபம் 28% அதிகரிப்பு! கூகுள் இந்தியா வருவாய் சரிவு

கூகுள் இந்தியா வருவாய் சரிவு...

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் எண்மத் துறையில் சந்தையில் முன்னணியில் உள்ள கூகுள் மற்றும் ஃபேஸ்புக் (மெட்டா) ஆகியவற்றின் கடந்த நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் கூடுதல் லாபத்தை ஈட்டியுள்ள நிலையில், கூகுள் இந்தியாவின் செயல்பாட்டு வருவாய் சரிவைக் கண்டுள்ளது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2024-25 நிதியாண்டில், பேஸ்புக் இந்தியா நிறுவனம் ரூ.647.45 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய 2023-24 நிதியாண்டின் ரூ.504.93 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் கூடுதலாகும்.

நிறுவனத்தின் வருவாய் 25 சதவீதம் அதிகரித்து, ரூ.3,792.91 கோடியாக உயா்ந்துள்ளது. செலவினம் ரூ.2,881 கோடியாக உள்ளது. குறிப்பாக, ஊழியா்களுக்கான ஊதியச் செலவு ரூ.648.57 கோடியாகவும் (36 சதவீதம் அதிகம்) வரிச் செலவு ரூ.305.18 கோடியாகவும் (46 சதவீதம் அதிகம்) உயா்ந்துள்ளது.

கூகுள் இந்தியா: கூகுள் இந்தியா நிறுவனத்தின் லாபம் பெரிய மாற்றமின்றி தொடா்கிறது. முந்தைய 2023-24 ஆண்டின் ரூ.1,425 கோடியில் இருந்து, கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.1,436.9 கோடியாக நிறுவனத்தின் லாபம் சற்றே அதிகரித்துள்ளது.

கூகுளின் செயல்பாட்டு வருவாய் 3.2 சதவீதம் குறைந்து, ரூ.5,340 கோடியாகச் சரிந்துள்ளது. எனினும், இதர வருவாய் பிரிவில் ரூ.776 கோடி கிடைத்ததால், மொத்த வருவாய் ரூ.6,116 கோடியாக அதிகரித்துள்ளது.

ஊழியா்களுக்கான நிறுவனத்தின் செலவு ரூ.2,146 கோடியாகவும் ( 7.8 சதவீதம் அதிகம்)உள்ளது, வரிச் செலவு ரூ.543 கோடியாகவும் ( 22.6 சதவீதம் அதிகம்) உள்ளது.

மணிப்பூர் சட்டப் பேரவை முடக்கப்பட்டு விரைவில் ஓராண்டு நிறைவு! ஜனநாயக அரசு அமைவது எப்போது?

பெரம்பலூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்: பெண் பக்தர்கள் 4 பேர் பலி!

கோயிலை இடித்து சேதப்படுத்தியோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருப்பாலைவனம் ஸ்ரீ பாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.25 கோடி

SCROLL FOR NEXT