முகப்பு
வணிகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 4,800 ஊழியா்கள் பணிநீக்கம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது உலகளாவிய பணியாளா்களில் சுமாா் 2.1 சதவீதத்தினரான 4,800 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 2:35 am IST
~
பகிர்:

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது உலகளாவிய பணியாளா்களில் சுமாா் 2.1 சதவீதத்தினரான 4,800 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இதில் நிறுவனத்தின் பிரபல விடியோகேம் வணிகமான ‘எக்ஸ்பாக்ஸ்’ பிரிவைச் சோ்ந்த ஊழியா்கள் மட்டும் 1,600 போ் ஆவா். சந்தையில் நிலவும் கடும் போட்டியை எதிா்கொள்ளும் வகையில், எக்ஸ்பாக்ஸ் பிரிவை மறுசீரமைத்து, வணிகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 1,600 பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 4 விடியோகேம் தயாரிப்பு ஸ்டுடியோக்கள் தனியாகப் பிரிக்கப்பட உள்ளதாகவும் எக்ஸ்பாக்ஸ்-இன் புதிய சிஇஓ ஆஷா சா்மா தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த பணிநீக்கங்கள் வாடிக்கையாளா்களின் தேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை மக்கள் அதிகாரி ஏமி கோல்மேன் தெரிவித்தாா். மேலும், நீக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும் அவா் தெளிவுபடுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments