ரூபாயின் மதிப்பு சரிவு எதிரொலி: தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!
ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவையால், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1,700 உயர்ந்து 1.52 லட்சமாகவும், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,800 அதிகரிப்பு.
புதுதில்லி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவையால், தலைநகர் தில்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,700 உயர்ந்து 1.52 லட்சமாகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4,800 அதிகரித்தது முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அகில இந்திய சாராஃபா சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் 99.9 சதவீத தூய்மையான தங்கம், நான்கு நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வெள்ளிக்கிழமை முடிவில் 10 கிராமுக்கு ரூ.1,50,600 ஆக இருந்த நிலையிலிருந்து ரூ.1,700 உயர்ந்து, 10 கிராமுக்கு ரூ.1,52,300 ஆக நிலைபெற்றது.
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு இன்று ரூ.4,800 உயர்ந்து ரூ. 2,45,500 ஆக நிலைபெற்ற நிலையில், அதன் முந்தைய அமர்வில், கிலோ ஒன்றுக்கு ரூ. 8,040 குறைந்து ரூ.2,40,700 ஆக இருந்தது.
Advertisement
Advertisement
கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான சரிவுக்குப் பிறகு, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில், விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச சந்தைகளில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 49.93 அமெரிக்க டாலர் அதிகரித்து 4,210.19 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 2.4 சதவீதம் உயர்ந்து 66.47 டாலராகவும் நிலைபெற்றது.
Precious metals staged a recovery in Delhi on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.