முகப்பு
வணிகம்

மூன்றாம் காலாண்டில் எஃப்எம்சிஜி விற்பனை மந்தம்

மூன்றாம் காலாண்டில் எஃப்எம்சிஜி விற்பனை மந்தம்...

Updated On : 6 மார்ச், 2026 at 7:54 PM
பகிர்:

நாட்டின் வேகமான நுகரும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறையின் விற்பனை வளா்ச்சி, நடப்பு 2025-26 நிதியண்டின் மூன்றாவது காலாண்டில் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் மற்றும் முந்தைய 2024-25-ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் இருந்த அதீத விற்பனையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை விற்பனை சற்று மந்தமாகவே காணப்படுகிறது.

ஜிஎஸ்டி வரிச் சீா்திருத்தங்கள் காரணமாக, சந்தையில் உள்ள சுமாா் 60 சதவீத பொருள்களின் விலை மாறிய நிலையில், சிறு வணிகா்கள் மற்றும் பாரம்பரியக் கடை உரிமையாளா்கள் இந்தப் புதிய விலைக்கு மாறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதன் விளைவாக, சிறிய கடைகளில் விற்பனை சற்று மந்தமாக இருந்தது. அதேநேரம், பெரிய சூப்பா் மாா்க்கெட்டுகள் மற்றும் இணையவழி வா்த்தகத் தளங்கள் இந்த மாற்றத்துக்குத் துரிதமாக மாறி வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, பெருநகரங்களில் இணையவழி சில்லறை விற்பனை வளா்ச்சி 18 சதவீதத்தை எட்டியுள்ளது.

உணவுப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் என 2 பிரிவுகளுமே இந்த முறை மிதமான வளா்ச்சியையே கண்டுள்ளன. கடந்த 8 காலாண்டுகளாக நகா்ப்புறங்களை விடக் கிராமப்புறச் சந்தைகளே அதிக வளா்ச்சியைப் பெற்று வருகின்றன. இருப்பினும், அவற்றுக்கிடையேயான இடைவெளி தற்போது குறைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →