முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ. 91.85ஆக நிறைவு!

இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ. 91.85 ஆக நிலைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 1:28 PM
பகிர்:

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ. 91.85 ஆக நிலைபெற்றது.

மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல்களின் தீவிரம் குறையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சற்றே தணிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 91.92 ஆக தொடங்கி ரூ. 91.71 முதல் ரூ. 92.19 என்ற வரம்பில் வர்த்தகமானது. முடிவில், அதன் முந்தைய முடிவிலிருந்து 36 காசுகள் உயர்ந்து ரூ. 91.85 ஆக நிலைபெற்றது.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவான உயர்வைக் கண்டதாலும், டாலருக்கு நிகரான டாலர் மதிப்பு வலுப்பெற்றதாலும், திங்கள்கிழமை வர்த்தகத்தில் (மார்ச் 9) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் குறைந்து ரூ. 92.21 என்ற வரலாறு காணாத அளவிற்கு சரிந்தன.

இதற்கிடையில், அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்ததால், உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 8.31% சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு $90.74 ஆக வர்த்தகமானது.

summary

The rupee staged a strong recovery from its record low against dollar on Tuesday gaining 36 paise to settle at 91.85.

முழு கட்டுரையைப் படிக்க →