முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.90.69 ஆக நிறைவு!

இன்றயை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.90.69 ஆக முடிவு.

Updated On : 17 பிப்ரவரி 2026, 5:31 pm IST
இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகள் நேர்மறையாகவும், வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து இருந்ததால், இன்றயை அந்நிய செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.90.69 ஆக முடிவடைந்தன.

இருப்பினும், வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுவதும், டாலர் உறுதியாக இருப்பதால், ரூபாயின் லாபம் குறைத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.72 ஆக தொடங்கி, பிறகு இன்ட்ராடே வர்த்தகத்தில் அதிகபட்சமான ரூ.90.64 ஆகவும் குறைந்தபட்சமான ரூ.90.78 ஆக தொட்டு, இறுதி வர்த்தகத்தில் அதன் முந்தைய இறுதி நிலையை விட 5 காசுகள் உயர்ந்தது ரூ.90.69 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

summary

The rupee gained 5 paise to settle at 90.69 against the US dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.