முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.57! 61 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 94.57 ஆக நிறைவு.

இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து சூசகமாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலரை நோக்கிப் பின்வாங்கியதால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 94.57 ஆக முடிவடைந்தன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95ஆக வர்த்தகம் தொடங்கி, பிறகு சரிந்து, இன்றைய வர்த்தகத்தில் ரூ. 95.18 என்ற குறைந்தபட்ச நிலையை அடைந்தது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் முடிவை விட 61 காசுகள் உயர்ந்து, இறுதியாக ரூ. 94.57ஆக நிலைபெற்றது.

வளைகுடாப் பகுதிகளில் மீண்டும் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதால் விநியோகச் சங்கிலி குறித்த அச்சங்கள் மீண்டும் எழுந்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் பின்வாங்கியதால், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு ஏற்படக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.44 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவை எட்டிய பிறகு ரூ.95.18 என்ற அளவில் இருந்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments