FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2-ம் நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

- ANI
பகிர்:

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று(மார்ச் 12) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,369.65 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 655.19 புள்ளிகள் குறைந்து 76,208.52 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக 850 புள்ளிகள் வரை குறைந்தது. அதிகபட்சமாக காலை 900 புள்ளிகள் வரை சரிந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 196.85 புள்ளிகள் குறைந்து 23,670.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி 50 குறியீட்டில் கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசஸ், என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

சென்செக்ஸ் 30 பங்குகளில் பவர் கிரிட், என்டிபிசி, ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின்றன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.58 சதவீதம், 0.88 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.

துறை வாரியாக, நிஃப்டி ஆட்டோ மிக மோசமான செயல்பாட்டில் உள்ளது. நிஃப்டி நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் 9.16 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 101.53 டாலராக உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்து வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.37 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

summary

Stock Market: Sensex recovers 600 pts from day's low, Nifty above 23,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments